இலங்கை கடற்படையினரால் நஷ்டத்துடன் கரை திரும்பிய மீனவர்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தால் பல்லாயிரம் ரூபாய் நட்டத்துடன் கரைத் திரும்பியதாக இந்திய மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று (புதன்கிழமை) மீன்பிடிக்க சென்ற சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்களுக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 500இற்கும் மேற்பட்ட படகுகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக புறப்பட்டுள்ளனர்.

இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு மூன்று ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மீனவர்கள் மீது கற்களையும், போத்தல்களையும் வீசி எறிந்து தாக்குதல் நடத்தியது மாத்திரமின்றி, மீனவர்களின் படகில் ஏறி அவர்களின் வலைகளை வெட்டி கடலில் எறிந்து உபகரணங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

கடற்படையினரின் செயற்பாட்டால் படகொன்றுக்கு 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம்வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*