உயர்தர பரீட்சையில் வரலாற்று சாதனைப்படைத்த பிக்கு!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகியுள்ளன.

இதன்படி, கலைப்பிரிவில் முதலாம் இடத்தை இரத்தினபுரி சத்தர்மாலங்கார பிரிவினா கல்லூரியின், பிக்கு மாணவர் பத்பேரியே முனிந்தவங்ச தேரர் பெற்றுக் கொண்டார்.

உயர்தர பரீட்சையில் பிக்கு ஒருவர் முதலாவது இடத்தை பெற்று கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் அகில இலங்கை ரீதியில் கணிதப்பாடப் பிரிவில் முதலாம் இடத்தை யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் மாணவர் சிறிதரன் துவாரகன் பெற்றுள்ளார்.

தாம் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடம்பெற்றமை தொடர்பில் அவர் எமது செய்திப்பிரிவிடம் மகிழ்ச்சி வெளியிட்டார்.

விஞ்ஞானப் பிரிவில் முதலாம் இடத்தினை மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் மாணவி திலினி சந்துனிகா பலிகக்கார அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றார்.

வணிகப் பிரிவிலும் மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் மாணவியான துலானி ரசன்திகா பெற்றுக் கொண்டார்.

பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் முதலாம் இடத்தை மாத்தறை – மகிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் மாணவர் பாரமி பிரசாதி சத்னசினி ஹெட்டிராச்சி பெற்றுக் கொண்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*