தெருவோர கடையில் காபி குடித்த பிரதமர் மோடி!

பிறப்பு : - இறப்பு :

இமாச்சல பிரதேச புதிய முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள காபி கடையில் மக்களுடன் சேர்ந்து காபி குடித்து மகிழ்ந்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த இமாச்சல பிரதேச தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி 66 இடங்களில் போட்டியிட்டு 44 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியையும் கைப்பற்றியது.

இந்நிலையில் இமாச்சல பிரதேச முதல்வராக ஜெய்ராம் தாகூரும், அவரது தலைமையிலான புதிய அமைச்சரவையும் இன்று பதிவேற்றனர். பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சிம்லா சென்றிருந்தனர்.

விழாவில் கலந்து கொண்டது தொடர்பாக பல்வேறு கருத்துக்களையும், புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். சிம்லாவில் உள்ள சாலையோரக் கடையில் மக்கள் மத்தியில் மோடி காஃபி அருந்துவது போன்ற படத்தை பதிவிட்டிருந்தார்.

இருபது வருடங்களுக்கு முன்பு கட்சி பணிக்காக இமாச்சலப் பிரதேசத்துக்கு அடிக்கடி வந்ததை நினைவு கூர்ந்த மோடி, தற்போது வரை காஃபியின் சுவை நன்றாக உள்ளதை குறிப்பிட்டுள்ளார்.

சாலையோர கடையாக இருந்தாலும் மோடி அதனை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் போட எப்போதும் தவறுவதில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit