257 மீனவர்களின் கதி என்ன ஆனது நாடாளுமன்றத்தில் சீறி பாய்ந்த அன்புமணி ராமதாஸ்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

தமிழகத்தில் ஓகி புயலால் தென் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.

மேலும், புயலால் மீனவர்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளார். நடுக்கடலில் மீன் பிடிக்க சென்ற பல மீனவர்கள் இன்றும் கரை திரும்பவில்லை.

அவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலையும் உரிய இழப்பீட்டுத் தொகையும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும்.

மேலும், மீனவர்கள் 100 நாட்டிகல் மைல் தொலைவில் சென்றிருந்தனர். அதனை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஆனால் மீட்பு படை 40 நாட்டிகல் மைல் தொலைவு வரைக்கும் சென்றுகூட தேடவில்லை.

இதனால் மீனவர்கள் பலர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மீனவர்களுக்காக தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*