ஆயிரம் கோடி அநியாயமாய் போனதா பேரழிவை உண்டாக்கும் அணு உலை அப்பட்டமான மோசடி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்திற்கு கடன் வாங்கியதில் விதிமீறல்கள் நடந்திருப்பதாகவும், இதனால்,அரசுக்கு ரூ. 525 கோடி வரை இழப்புஏற்பட்டுள்ளதாகவும் மத்திய கணக்குத்தணிக்கை துறை குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் புதன்கிழமையன்று சிஏஜிதாக்கல் செய்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கூடங்குளத்தில் ரஷ்ய அரசின் உதவியுடன் அணுமின் உலைகள் அமைக்க, இந்திய அணுமின் கழகத்தால் திட்டமிடப்பட்டு, முதல் 2 அலகுகள் தற்போது நிறுவப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை அமைக்க திட்டமிட்டதை விட மிகுந்த காலதாமதம் ஏற்பட்டது.

முதல் அலகுக்கு 7 ஆண்டுகளும், இரண்டாவது அலகுக்கு 6 ஆண்டுகளும் காலதாமதம் ஏற்பட்டது. இதன்காரணமாக திட்டச் செலவும் அதிகரித்தது.

அதாவது, தாமதம் காரணமாக, எச்.டி.எப்.சி. வங்கியிடம் இந்தியஅணுமின் கழகம் வாங்கிய கடனுக்கு வட்டியாக மட்டும் ரூ. 449.92 கோடிரூபாய் அளவிற்கு செலுத்த வேண்டிய தாகி விட்டது.

அத்துடன் அரசு நிறுவனங்களிடம் அல்லாமல், தனியார் வங்கிகளிடம் இருந்து கடன் பெற்றதால், கூடுதலாக ரூ. 75 கோடி வட்டி கட்டப்பட்டு உள்ளது.

இப்படியாக வட்டிஎன்ற வகையில் மட்டும் ரூ. 525 கோடி அதிகமாக செலவாகி இருக்கிறது.

அதுமட்டுமன்றி, எச்.டி.எப்.சி. வங்கியில் இருந்து ரூ. 1000 கோடிகடனாகப் பெறப்பட்டதிலும் தவறு நடந்துள்ளது.

அரசுத் திட்டச் செலவீனங்களுக்கான மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.

அத்துடன் அணு உலைக்கு என தரம் குறைந்த மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதன் காரணமாகவும் கூடுதல் செலவு உண்டாகியுள்ளது.

இவை அனைத்தையும் தடுத்திருக்கவேண்டும். ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டவோ, சரிசெய்யவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எதிர்வரும் காலத்திலும் இதே போல அணு உலைகள் அமைக்கும் பணிகள் தாமதமாகும் நிலை ஏற்பட்டால்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத் தில் தற்போது, ரூ. 39 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 3 மற்றும் 4-ஆவது அணுஉலைகளை நிர்மாணிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன என்பதும், இந்த பணிகளை 2024-ஆம்ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*