இந்தியாவின் முக்கிய 6 நகரங்களில் சென்னையில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்: மத்திய குற்ற ஆவணக்காப்பகம் தகவல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பெண்களுக்கு பாதுகாப்பான 6 நகரங்களின் பட்டியலில் சென்னையில் பெண்கள் அதிக பாதுகாப்புடன் இருப்பதாக குற்ற ஆவணக்காப்பக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பற்ற நகரமாக டெல்லி முதலிடத்தில் உள்ளது.

பெண்களுக்கு எதிராக அதிகஅளவு குற்றங்கள் நடைபெறும் 6 பெருநகரங்களின் பட்டியலை மத்திய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.

அதில், ‘‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மிகமோசமான நகரமாக டெல்லி உள்ளது. டெல்லியில் 75.8 லட்சம் பெண்கள் வசிக்கும் நிலையில், 13,803 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 7963 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 679 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் 11,810 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 8728 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 884 பேர் தண்டனை பெற்றனர்.

பெண்களுக்கு பாதுகாப்பற்ற மிக மோசமான நகரங்களின் பட்டியலில் 2 இடத்தில் மும்பையும், 3வது இடத்தில் கொல்கத்தாவும், 4வது இடத்தில் லக்னோவும் உள்ளன. 5வது இடத்தில் பெங்களூரு உள்ளது.

இந்த பட்டியலில் 6 இடத்தை பிடித்து, பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்குகிறது. சென்னையில் 43.1 லட்சம் பெண்கள் வசிக்கும் நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 544ஆக பதிவாகி உள்ளது. 401 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 153 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 578 பேர் கைது செய்யப்பட்டு 506 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 189 பேருக்கு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*