வவுனியா புகையிரத நிலைய வீதியில் பதற்றம்: இருவர் கைது!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

jail-arrested-arrest-prison3185

வவுனியா மணிக்கூட்டு பகுதியிலிருந்து வைரவர்புளியங்குளம் பகுதி நோக்கி புகையிரத நிலைய வீதியால் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று கண்மூடித்தனமாக சென்றதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியுள்ளது.

அத்துடன், குறித்த முச்சக்கர வண்டி அருகில் பயணித்த மற்றுமொரு முச்சக்கரவண்டியை மோதிச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று இரவு 7.15மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் எதிரே பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் குறித்த முச்சக்கர வண்டி மோதி செல்லும்போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து புகையிரத கடவையை கடந்து தடம்புரண்டுள்ளது.

இதனையடுத்து, பொதுமக்களால் அம்முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரும் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரும் மதுபோதையில் இருந்ததை அவதானிக்க முடிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் இருவரையும் கைது செய்து பட்டா ரக வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளதுடன், குறித்த முச்சக்கர வண்டியையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit