ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுக்க வந்த ரசிகர் செய்த செயல்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இன்று இரண்டாவது நாளாக ரசிகர்களை சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டர்.

அப்போது ஒரு ரசிகர் மட்டும் புகைப்படம் எடுக்காமல், கடவுளை பார்த்ததே போதும் என்று கூறியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நடிகர் ரஜினிகாந்த், தனது ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். வரும் 31ஆம் திகதி, தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்போவதாக அவர் அறிவித்திருந்தார்.

மேலும், தனது சினிமா வாழ்க்கை குறித்து பல விடயங்களை நேற்று பகிர்ந்த ரஜினிகாந்த், இன்று சுருக்கமாக தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறுகையில், ‘இரண்டாவது நாளாக உங்களை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொருவருக்கும், அவர்களின் குடும்பம் முக்கியம்.

தாய், தந்தை தான் வாழும் தெய்வங்கள். நமது சொத்துக்களான குழந்தைகளை, நன்கு வளர்க்க வேண்டும். ரசிகர்கள் கட்டுப்பாட்டுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நீங்கள் ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி’ என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உட்பட 5 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,000 ரசிகர்கள் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ஆனால், அதில் ஒரு ரசிகர் மட்டும் புகைப்படம் எடுத்துக் கொள்ளாமல், ரஜினியையே வணங்கியபடி பார்த்துக் கொண்டிருந்தார். சபையில் இருந்தவர்கள் ‘புகைப்படம் எடுத்துக்கொள்’ என்று கூச்சலிட்டுள்ளனர்.

ஆனால், புகைப்படத்திற்கு போஸ் கொடுக்காமல் ரஜினியை பார்த்தப்படியே நின்றிருந்தார். மேலும் அவர், ’நான் கடவுளை தரிசிக்க தான் வந்தேன், புகைப்படம் எடுக்க வரவில்லை’ என தெரிவித்தார்.

அதன் பின்னர், அந்த ரசிகர் புதுக்கோட்டையைச் சேர்ந்த குணசேகர் என்பது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து அவர் கூறுகையில், ‘நான் இயக்குநர் ஷங்கரின் கார் ஓட்டுநர்.

9 வயதில் இருந்தே எனக்கு ரஜினியைப் பிடிக்கும். அவரை பல தடவை படப்பிடிப்புகளில் பார்த்திருக்கிறேன். ஆனால், அவரிடம் சென்று நான் உங்களின் ரசிகர் என்று கூற விரும்பவில்லை.

அவரோட ரசிகரா அவரை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதனால் தான் அவர் அருகில் நின்றபோது புகைப்படம் எடுத்துக் கொள்ளாமல், அவரைப் பார்த்துக் கொண்டே நின்றேன்.

அவர் எனக்கு கடவுள். அவர் அரசியலுக்கு வந்து மக்களை காக்க வேண்டும், என்பதே எனது ஆசை’ என தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*