தமிழ் மக்களின் இறுதித் தீர்வில் நம்பிக்கையில்லை: சித்தார்த்தன்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழ் மக்களுடைய அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய இறுதித் தீர்வில் நம்பிக்கையில்லை என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலைக்கழகத்தின் தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

வவுனியா, கோவில்குளம் உமாமகேஸ்வரன் நினைவிடத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்திருத்தார்.இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில்,

“வடக்கு கிழக்கிலே கிளிநொச்சி, அம்பாறை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் உள்ள பிரதேச சபைகளிற்கு எமது வேட்பாளர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிலே வீட்டுச்சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் ஆதரவளித்து பெரு வெற்றிக்கு இட்டுச்செல்ல வேண்டும். ஏனெனில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடனும் சர்வதேசத்துடனும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றது.

இவ்வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலவீனமடையுமானால் அது தமிழ் மக்களை பலவீனமாக்கின்ற ஒரு விடயமாக போகும்.

இங்கு எந்தக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கக்கூடிய அளவிற்கு ஆசனங்களை கைப்பற்றப்போவதில்லை. ஆகவே வாக்குகளைச் சிதறடித்து கூட்டமைப்பின் பலத்தை குறைக்கக்கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கையாகவுள்ளது.

தமிழ் மக்களுடைய அபிலாசைகள் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒர் இறுதித் தீர்வு ஒன்று வரும் என்று நான் நம்பவில்லை.

இருந்தாலும் இந்த நடவடிக்கைகளில் இருந்து நாமாக விலகிக்கொண்டவர்களாக இருந்தால் இன்று இருக்கின்ற சூழலில் ஐக்கிய நாடுகளினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அடியொட்டி அல்லது சர்வதேசத்தின் அழுத்தத்தின் காரணமாகவே இவை செயற்படுத்தப்பட்டு வருவதனால் அவற்றின்மீது அழுத்தங்கள் ஏற்படும்.

வெளிநாட்டு இராஜதந்திரிகளும் கூட இதைக் குழப்பி விடாமல் இதனை எடுத்துச்செல்வதற்கான வழியை மேற்கொள்ளுங்கள் என்று கூறுகின்றார்கள்.

ஆகவே அதை மீறி நாங்களாகவே குழப்பினால் சிங்களப் பேரின வாதத்திற்கு எமது விடயத்தைக் கையாழ்வதற்கு இலகுவாக்கி விடுவோம். ஆகவே இவ்விடயத்தினைக் குழப்பிக்கொண்டு வெளியே வர முடியாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*