சுயலாப அரசியல் நடத்தும் தமிழ் தலைமைகள் போல் நானும் இருக்க முடியாது

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நான் 15 வருடங்களுக்கு மேலான ஆயுத வழிமுறைப் போராட்டத்திலும், முப்பது வருடங்களுக்கு மேலான தேசிய அரசியல் வழிமுறைப் போராட்டத்திலும் முழுமையான அர்ப்பணிப்போடும் அதற்கான உண்மையான உழைப்போடும் ஈடுபட்டு வந்திருக்கின்றேன் என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈ.பி.டி.பி கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

புலிகள் உட்பட அனைத்துப் போராட்ட இயக்கங்களுடனும் பொது இணக்கப்பாடு காணப்பட வேண்டுமென்பதே எனது நிலைப்பாடாக இருந்தது. ஆனால் அக்காலத்தின் அகச்சூழலும், புறச்சூழலும் விடுதலைப் போராட்ட இயக்கங்களை வேறுபடுத்தியே வைத்துவிட்டன.

இலக்கு ஒன்றாக இருந்தபோதும் அதற்கான போராட்ட வடிவமும், அந்த போராட்டத்தை முன்னெடுத்த விதமும் வேறுபட்டதாக அமைந்துவிட்டது. அது துரதிஷ்டமே.

நான் அடைமுடையாத இலக்கு நோக்கி எனது மக்களை ஒருபோதும் வழி நடத்தியதில்லை. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை எனது மக்களுக்கு ஒருபோதும் வழங்கியதும் இல்லை. எல்லாக் காலத்திலும் மக்களோடு இருந்து, மக்களோடு வாழ்ந்து வருவதால் எனது மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் தெளிவாக தெரிந்து கொண்டிருக்கின்றேன்.

மேலே கூறிய இரு வழிமுறை போராட்டங்களுக்கு ஊடாகவும் கிடைக்கப் பெற்ற அனுபவங்களில் இருந்தே எனது மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் நடைமுறைச் சாத்தியமான வழிமுறையூடாக தீர்வு காணப்படவேண்டும் எனறு முயற்சித்திருக்கின்றேன். தீர்வுகளை கண்டும் இருக்கின்றேன்.

காலத்திற்கு காலம் வாக்குகளை அபகரிப்பதற்காக, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறியும், தமது இயலாமை காரணமாக அரசுகள் மீது மட்டுமே குறைகளை சுமத்தியும் சுயலாப அரசியல் நடத்திவரும் தமிழ் தலைமைகள் போல் நானும் இருந்து விடமுடியாது.

மக்களோடு வாழ்ந்து, மக்கள் அனுபவித்த வலிகளிலும், துயரத்திலும் பங்கெடுத்து தாயக மண்ணின் தன்மையறிந்து, தேவையறிந்து செயற்படும் செயல் வீரரே மக்கள் தலைவராக திகழமுடியும்.

கடந்த காலத்திலும் இது போன்று நிதர்சனமாக நான் முன்வைத்த கருத்துக்கள் உங்களை முழுமையாக வந்து அடையவில்லை. அதற்கு சில தடைகள் இருந்ததையும் நான் மறுக்கவில்லை. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

எதிர்காலத்திலாவது சரியான பாதையில் பயணிக்க அணிதிரண்டு வருவீர்கள் என்றும் வீணைக்கு வாக்களித்து உங்களை நீங்களே பலப்படுத்திக்கொள்வீர்கள் என்றும் நம்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*