வைரலாகும் டோனி மகளின் வீடியோ!

பிறப்பு : - இறப்பு :

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி கிரிக்கெட்டில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர்.

இவரின் செல்ல மகள் ஜிவா, சமீப காலங்களில் பாடல் பாடுவது, சமையல் செய்வது போன்று அனைவரையும் சிரிக்க வைக்குக் சில குறும்புத்தனமான செயல்களால் சமூகவலைத்தளங்கள் மூலம் ரசிகர்களை தனது பக்கம் ஈர்த்து வருகிறார்.

இதுபோன்ற வீடியோக்களை காணும் நெட்டிசன்கள், சில தினங்களுக்குள் அந்த வீடியோக்களை வைரலாக்குகின்றனர்.

அதன் அடிப்படையில் தற்போது புதிதாக ஒரு வீடியோ சேர்ந்துள்ளது. அதில் ஜிவா தனது தந்தையுடன் காரில் செல்லும் போது தனது மழலை குரலால் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

இதற்கு டோனி தலையை ஆட்டிக்கொண்டு தனது குழந்தையை ரசிக்கிறார், இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit