மேலாடை அணியாமல் வந்த இளம் பெண்: இயேசுவின் சிலையை அபகரிக்க முயன்றதால் பரபரப்பு!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

nu

வாட்டிகனில் குழந்தை ஏசுவின் சிலையை மேலாடை அணியாமல் வந்த பெண் அபகரிக்க முயன்றதால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் நேற்று கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்டது. அதே போன்று கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடும் விதமாக வாட்டிகனின் St. Peter’s Square பகுதியில் குழந்தை இயேசுவின் சிலை மற்றும் சில சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.

அப்போது திடீரென்று இளம் பெண் ஒருவர் அந்த சிலை இருக்கும் பகுதியை நோக்கி மேல் ஆடை இல்லாமல் வந்து, அங்கிருந்த குழந்தை ஏசுவின் சிலையை அபகரிக்க முயன்றுள்ளார்.

இதைக் கண்ட அங்கிருந்த பொலிசார் உடனடியாக கருப்பு நிற போர்வை ஒன்றை கொண்டு வந்து அப்பெண்ணை போர்த்தி கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

பொலிசார் அந்த பெண்ணை தடுக்க முயற்சித்த போது, இந்த உலகில் பெண் தான் கடவுள் என்று கூறியுள்ளார், பட்டப்பகலில் பொதுமக்கள் பலரும் இருக்கும் வேளையில் இது போன்ற செயலில் அப்பெண் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit