இரண்டாவது சுற்றில் ஃபெடரர், நடால், ஷரபோவா

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்த சீசனின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், கிராண்ட் ஸ்லாம் நாயகனான ரோஜர் ஃபெடரர், ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆகியோர் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர். மகளிர் பிரிவில் ரஷியாவின் மரியா ஷரபோவா போட்டியை வெற்றியுடன் தொடக்கியுள்ளார். ஆனால், முன்னாள நம்பர் – 1 வீராங்கனையான செர்பியாவின் இவானோவிச் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார்.

மெல்போர்ன் நகரின் ராட் லேவர் அரீனா மைதானத்தில் திங்கள்கிழமை முதல் சுற்று ஆட்டங்கள் தொடங்கின. 18 முறை கிராண்ட் ஸ்லாம் வென்ற சுவிட்சர்லாந்தின் ஃபெடரர், சீன தைபேயின் யென் சன் லூவை எதிர் கொண்டார். இதில் 6-4, 6-2, 7-5 என்ற நேர் செட்களில் ஃபெடரர் எளிதில் வெற்றி பெற்றார்.

கடந்த ஆண்டு இறுதியில் காயம் காரணமாக அவதிப்பட்ட ரஃபேல் நடால், முதல் சுற்றில் ரஷியாவின் மிகைல் யூஷ்னியை சந்தித்தார். இந்த ஆட்டத்தில், 14 முறை கிராண்ட் ஸ்லாம் வென்ற நடால் 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். நடால் ஒரே ஒரு முறை மட்டுமே தனது சர்வை பிரேக் செய்ய வாய்ப்பளித்தார். இதன் மூலம் இந்தி சீசனை அவர் சிறப்பாகவே தொடங்கியுள்ளார்.

மூன்று முறை இந்தத் தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி வெற்றி வாய்ப்பை இழந்துள்ள பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரே, தரவரிசையில் 317ஆவது இடத்தில் உள்ள

இந்தியாவின் யூகி பாம்ப்ரியை எதிர் கொண்டார். இதில், முர்ரே 6-3, 6-4, 7-6(3) என்ற நேர் செட்களில், இந்தியாவில் இருந்து பிரதான சுற்றுக்கு முன்னேறிய ஒரே வீரரான யூகி பாம்ப்ரியைத் தோற்கடித்தார்.

கடந்த முறை காலிறுதிக்கு முன்னேறிய பல்கேரியாவைச் சேர்ந்த கிரிகோர் டிமிட்ரோவ், தரவரிசையில் 90ஆவது இடத்தில் உள்ள ஜெர்மனியைச் சேர்ந்த டஸ்டின் பிரவுனை 6-2, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.

மகளிர் பிரிவில், 2008ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் வெல்லும் முனைப்பில் உள்ள, தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் மரியா ஷரபோவா, 6-4, 6-1 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் பெட்ரா மேட்ரிச்சைத் தோற்கடித்தார். ஆனால், போட்டித் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ள அனா இவானோவிச்சை, செக் குடியரசின் லூசி ராடெகா 1-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

அதேபோல, போட்டித் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ள ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர், ருமேனியாவின் ஐரினா கேம்லியா பெகுவிடம் தோல்வியடைந்து, முதல் சுற்றுடன் நடையைக் கட்டினார்.

வளர்ந்து வரும் வீராங்கனைகளான ருமேனியாவின் சிமோனா ஹாலேப், கனடாவின் பெüசார்டு ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

கர்ப்பமாக உள்ளேன்: லி நா
கடந்த முறை ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற சீனாவைச் சேர்ந்த லி நா, சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். ரோஜர் ஃபெடரர்- யென் சன் லூ ஆகியோரது ஆட்டம் தொடங்கும் முன், 15,000 ரசிகர்கள் முன்னிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக லி நா அறிவித்தார். அவர் கூறுகையில்,””விரைவில் எனக்கு முதல் குழந்தை பிறக்க உள்ளது. நானும், கணவரும் அதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்’ என்றார். அப்போது ரசிகர்கள் உற்சாகமாக வாழ்த்து தெரிவித்தனர்.

ஷரபோவா கூறுகையில், “லி நா சிறந்த தாயாக திகழ்வார் என நம்புகிறேன். வாழ்வின் புதிதான அத்தியாயத்தில் அடியெடுத்து வைப்பது எப்போதுமே பெரும் எதிர்பார்ப்பைத் தரும்” என்றார்.

தரவரிசையில் 300க்கும் மேற்பட்ட இடத்தில் இருப்பவரின் ஆட்டத்தை விட யூகி பாம்ப்ரியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. கடந்த ஆறு மாதங்கள் அவர் காயத்தால்

அவதிப்பட்டதால் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. ஒரு வேளை அவர் இந்த சீசனில் காயமின்றி இருந்தால், சீசன் முடிவில் தரவரிசையில் நூறுக்குள் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.ஆன்டி முர்ரே, பிரிட்டன்.

சீசனின் தொடக்கத்தில் ஃபார்மைப் பெறுவது சவாலான விஷயம். ஆனால், இந்த மைதானம் அருமையாக இருந்தது. முதல் ஆட்டம் சிறப்பாக இருந்தது. சில அருமையான ரேலிகளும் இடம் பெற்றிருந்தன.
ரோஜர் ஃபெடரர், சுவிட்சர்லாந்து.

நேர்மறையான முடிவு கிடைத்துள்ளது. தொடக்கம் சிறப்பாக அமைய வேண்டியது முக்கியம். முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது.
ரஃபேல் நடால், ஸ்பெயின்.

முதல் ஆட்டத்தில் தேவையில்லாமல் பல ஷாட்களை வலையில் (அன்ஃபோர்ஸ்டு எரர்) அடித்தேன். இருப்பினும், முடிவில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி.
மரியா ஷரபோவா, ரஷியா.

இன்று எனக்கு எதுவுமே சரியாக அமையவில்லை. முதல் ஆட்டத்திலேயே தோல்வியடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது. சில நேரங்களில் இப்படித்தான் மோசமான விஷயங்கள் நடந்து விடுகின்றன.
அனா இவானோவிச், செர்பியா.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*