கடல் எல்லை அருகே சென்ற ரஷ்ய போர்க் கப்பல்: பிரித்தானியா எச்சரிக்கை!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ru

ரஷ்யாவுக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்று கிறிஸ்துமஸ் தினத்தன்று பிரித்தானியாவின் கடல் எல்லை அருகே சென்றதால், அந்நாட்டுக்கு பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானியாவின் கடல் எல்லை வழியாகச் செல்லும் ரஷ்யப் போர்க்கப்பல்கள் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று பிரித்தானியாவின் கடற்படை ராயல் நேவி, HMS ஸ்டெயின் ஆல்பன்ஸ் போர்க்கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் ரோந்து பணியில் இருந்தது.

அப்போது வடக்கு கடற்பகுதியை ரஷ்ய போர்க்கப்பல் கடந்து சென்றுள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்திய பிரித்தானியா கடற்படை, அத்துமீறும் செயல் எந்த வகையில் வந்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், பிரித்தானியாவின் பாதுகாப்பு செயலர் கவின் வில்லியம்சன், நமது கடல் எல்லைகளைக் காக்கத் நான் தயங்கமாட்டேன் என்றும் எவ்விதமான அச்சுறுத்தலையும் சகித்துக்கொள்ள மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

கடந்த 2014-இல் ரஷ்யா கிரீமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டதில் இருந்து, ரஷ்யா மற்றும் பிரித்தானியா இடையேயான உறவு பதற்றமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit