அன்று பயப்படமாட்டோம் என்று கூறிய வடகொரியா: இன்று அடுத்தகட்டத்திற்கு தயாராகிவிட்டதாக தகவல்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

vada-korea

அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்படமாட்டோம் என்று கூறிய வடகொரியா, தற்போது செயற்கோளை ஏவ தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகநாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனால் அந்நாட்டின் மீது அமெரிக்கா, தென் கொரியா உட்பட பல நாடுகள் ஆத்திரத்தில் உள்ளன. கடந்த சனிக்கிழமை கூட வடகொரியா அத்து மீறி செயல்படுவதாக கூறி பொருளாதார தடை விதிக்கப்பட்டது.

இதற்கு வடகொரியா போருக்கான செயலைப் போன்று இது உள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தது. இப்படி தன்னுடைய அணு ஆயுத சோதனைகளால் உலகநாடுகளை அச்சுறுத்த் வரும் வடகொரியா தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.

அதாவது வடகொரியா சமீபத்தில் புதிய செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது என்றும், க்வாங்மியாங்சாங்-5 என்று பெயரிப்பட்டுள்ள அந்த செயற்கைகோள் விரைவில் விண்ணில் ஏவப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஏனெனில் சமீபத்தில் வெளியான வடகொரியாவின் அரசு நாளிதழில், சர்வதேச சட்டப்படி இறையாண்மை உள்ள ஒவ்வொரு நாடும் விண்ணில் செயற்கைகோளை ஏவும் உரிமையை பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

இதனால் வடகொரியா செய்ற்கைகோளை கண்டிப்பாக விண்ணில் ஏவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் நடந்த ஐ.நா பொதுக் கூட்டத்தில் வடகொரியா பொருளாதார முன்னேற்றம் மற்றும் வடகொரிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில், எங்கள் நாடு 2016-2020-ல் செயற்கைகோள் திட்டத்தை செயல்படுத்தும் என்று தெரிவித்திருந்தது.

அதுமட்டுமின்றி அமெரிக்காவின் மிரட்டலுக்காக செயற்கைகோளை ஏவும் உரிமையை விட்டுக் கொடுக்கவோ, மாற்றிக் கொள்ளவோ மாட்டோம் எனவும் தெரிவித்திருந்த நிலையில், தற்போது செயற்கைகோள் திட்டத்தில் வடகொரியா வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit