உயிருக்காக கெஞ்சிய பெண்கள் ஈட்டியால் கொல்லப்பட்ட கொடூரம்: வெளியான கோப்பு தகவல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சீனாவில் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தியானன்மென் சதுக்க போராட்டம் சீனாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்டமாக கருதப்படுகிறது.

1989 ஆம் ஆண்டு சீனாவில் ஜனநாயக அரசு வேண்டி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் உள்பட பலர் தியானன்மென் சதுக்கத்தில் ஒன்று கூடி போராடினர், அப்போது அரசு மேற்கொண்ட அடக்குமுறையில் பலர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து சமூக வளைத்தளங்களில் விவாதிப்பது குறித்து அதிக கட்டுப்பாடுகளை சீனா விதிக்கிறது.

இந்த போராட்டத்தில், 200 பேர் இறந்ததாகவும், பல பாதுகாப்பு அதிகாரிகள் இறந்தார்கள் என்று சீன அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த போராட்டத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர் என்று, புதியதாக வெளியாகியுள்ள பிரித்தானிய வெளிவிவகாரக் கோப்பு விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த எண்ணிக்கை, அப்போது சீனாவிற்கான பிரிட்டன் தூதரான ஆலன் டொனால்டிற்கு ரகசிய ராஜதந்திர தகவல் பறிமாற்ற முறையில் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்கள் லண்டனிலுள்ள பிரிட்டன் தேசிய ஆவணக்காப்பத்தில் வைக்கப்பட்டன. கடந்த அக்டோபர் மாதம், ஹெச்.கே.01 என்ற செய்தி தளத்தில் வெளியாகின.

இந்த போராட்டத்தின் போது, மாணவர்கள் ஒரு மணிநேரத்தில், சதுக்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று இருந்தனர். ஆனால், அடுத்த ஐந்து நிமிடங்களில், அவர்கள் டாங்கிகளால் தாக்கப்பட்டனர் என்று அந்த கோப்புகளில் இடம்பெற்றுள்ளது.

மாணவர்கள் ஆயுதங்களை வைத்திருந்தபோதிலும், அவர்கள் கொல்லப்பட்டனர். பிறகு, ஏ.பி.சி டாங்கிகள், அவர்கள் உடல்கள் மீது பலமுறை ஏற்றி இறக்கப்பட்டன.

அந்த நசுங்கிய உடல் மிச்சங்கள், கனரக வாகனத்தில் சேமிக்கப்பட்டன. அவை, எரிக்கப்பட்டு, மிச்சங்கள் கால்வாய்களில் கரைக்கப்பட்டன.

காயப்பட்டு, உயிருக்காக கெஞ்சிய நான்கு பெண்கள், துப்பாக்கி முனையில் உள்ள ஈட்டியால் கொல்லப்பட்டனர் போன்ற முக்கிய தகவல்கள் அந்த கோப்புகளில் இடம்பெற்றுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகாரக் கோப்பு விவரங்கள் தெரிவிக்கின்றன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*