‘நக்சல் இயக்கத்தில் சேருங்கள், சுட்டுக் கொல்கிறோம்’: மருத்துவர்களை மிரட்டும் மத்திய மந்திரி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

kill

மராட்டியம் மாநிலம் சந்த்ராபூர் மக்களவை உறுப்பினராக உள்ள ஹன்ஸ்ராஜ் ஆஹிர் மத்திய உள்துறை இணை மந்திரியாகவும் பணியாற்றி வருகிறார். நேற்று, அவரது தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் இயங்கும் மருந்தகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

மேயர், துணை மேயர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். ஆனால், மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதனை குறிக்கும் விதமாக பேசிய மந்திரி, “ இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க எது மருத்துவர்களை தடுத்து நிறுத்தியது?, நக்சல்களுக்கு என்ன வேண்டும்?, அவர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. அதனால், இவர்களுக்கும் (மருத்துவர்களுக்கும்) ஜனநாயகம் தேவையில்லை. அப்படியானால், அவர்கள் நக்சல் இயக்கத்தில் இணையலாம். ஏன் இங்கே இருக்கிறீர்கள்?” என்று கோபம் பொங்க பேசியுள்ளார்.

மேலும், “ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத அவர்கள், நக்சல் இயக்கத்தில் இணைந்தால், துப்பாக்கிகளை கொண்டு உங்களுக்கு பதில் சொல்வோம்” என்றும் அவர் மிரட்டலாக கூறினார். மராட்டியம் மாநிலத்தின் சந்த்ராபூர் மாவட்டம் உள்பட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நக்சல்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளாகும்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit