முக­மூடி அணிந்த 8 நபர்­கள் யாழ் துன்­னா­லை காட்டுப் பகுதியில் செய்த அட்டகாசம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

முக­மூடி அணிந்த 8 நபர்­கள் கடமை முடிந்து சென்ற பனை தென்னை வள அபி­வி­ருத்­திக் கூட்­டு­ற­வுச் சங்­கத்­தின் கிளை முகா­மை­யா­ ளர்­க­ளைத் தாக்கி அவர்­க­ளி­ட­மி­ருந்த பணம், அலை­பேசி, ஆவ­ணங்­கள் ஆகி­ய­வற்றை அப­க­ரித்­துச் சென்­ற­னர்.

இந்­தச் சம்­ப­வம் நேற்­று­முன்­தி­னம் இரவு 8.30 மணி­ய­ள­வில் கன­கன்­பு­ளி­யடி – துன்­னா­லைச் சாலை­யில் கப்­பூது காட்­டுப் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது.

சாவ­கச்­சேரி பனை தென்னை வள அபி­வி­ருத்­திக் கூட்­டு­ற­வுச் சங்­கத்­தின் கிளை முகா­மை­யா­ளர்­க­ளாக் கட­மை­யாற்­றும் வட­ம­ராட்சி கர­ண­வாய் மற்­றும் பருத்­தித்­துறை ஆகிய பகு­தி­க­ளைச் சேர்ந்த இரு­வர் வழமை போல கிளை­களை மூடி­ய­பின்­னர் இரு மோட்­டார் சைக்­கி­ளில் சென்­றி­ருந்­த­னர்.

இரவு வேளை­யில் சாலை­யில் நட­மாட்­டம் குறை­வாக இருந்­துள்­ளது. மோட்­டார் சைக்­கி­ளில் சென்ற அவர்­களை பற்­றைப் பகு­தி­யான இடத்­தில் முக­மூடி அணிந்­தி­ருந்த மூவர் வழி­ம­றித்­த­னர்.

ஆயு­தங்­க­ளா­லும் பொல்­லு­க­ளா­லும் தாக்கி விட்டு அவர்­க­ளி­ட­மி­ருந்த பணம், மோட்­டார் சைக்­கிள் ஆவ­ணங்­கள், தேசிய அடை­யாள அட்டை, அலை­பே­சி­கள் ஆகி­ய­வற்றை அப­க­ரித்­துச் சென்­ற­னர்.

அதன்­பின்­னர் அவர்­கள் மோட்­டார் சைக்­கிள்­களை எடுத்­துக் கொண்டு சென்ற வேளை­யில் குறித்த நபர்­கள் மீள­வும் பின்­தொ­டர்ந்­த­ னர்.

தாக்­கப்­பட்­ட­வர்­கள் இது தொடர்­பில் தலை­மைப் பீடத்­துக்கு தக­வல் வழங்­கி­னர். பொலிஸ் நிலை­யத்­திலும் முறைப்­பாடு செய்­ய­வுள்ளனர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*