தமிழ் சினிமாவில் கால் பதிக்க போகிறார் இந்திய அணியின் அதிரடி வீரர்!

பிறப்பு : - இறப்பு :

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரும் முன்னாள் கேப்டனுமான தோனி தமிழ் சினிமாவில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தோனியின் வாழ்க்கை வரலாறு எம்எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் வேறு ஒரு நடிகரின் நடிப்பில் நாடு முழுவதும் வெளியானது.

அந்த படம் தோனி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது.

இந்நிலையில் தோனி குரும்படம் ஒன்றில் நடிக்கப்போவதாகவும், அதுவும் தமிழில் நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கேட்ச் நியூஸ் என்ற ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், நான், எமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஜீவா சங்கர் இயக்கும் விளையாட்டு பின்னணியில் ஒரு படம் தயாரிக்கப்படவுள்ளதாகவும்,

இளைஞர்களின் விளையாட்டு திறனை வெளிக்கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் தான் தோனி நடிக்கவுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

விளம்பரங்களில் நடித்து வரும் தோனி, முதல்முறையாக படத்தில், அதிலும் தமிழில் நடிக்கப்போவது அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit