
இந்தியாவில் கற்பழிப்பு முயற்சியில் இருந்து தாயை காப்பாற்ற முயன்ற மகனை குற்றவாளி குத்திக் கொலை செய்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் ஆமதாபாத் கிழக்கு பகுதியில் உள்ள ஒதாவ் என்ற இடத்தின் சாலையோரத்தில் ஏழைகள் வசித்து வருகின்றனர்.
இங்கு 13 வயது சிறுவன் ஒருவன் தனது தாய்- தந்தையுடன் வசித்து வருகிறார், அப்போது சம்பவதினத்தன்று குடிபோதையில் வந்த தாகூர் என்ற வாலிபர் சிறுவனின் தாயை கற்பழிக்க முயன்றுள்ளார்.
அங்கிருந்தவர்கள் சத்தம்போடவே, மகன் மற்றும் கணவர் காப்பாற்ற முயன்றுள்ளனர், அப்போது தாகூரும், அவனது நண்பர்களும் காப்பாற்ற முயன்றவர்களை தாக்கியுள்ளனர்.
இதில் சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தான், இதற்கிடையே குற்றவாளிகள் தப்பியோடி விட்டனர்.
விவரம் அறிந்த பொலிசார் தாகூர் உட்பட மூன்று பேரை கைது செய்தனர், மற்றவர்களை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து பொலிசார், ஆக்கிரமிப்பு செய்தவர்களை காலி செய்யச்சொன்ன போது தான் மோதல் ஏற்பட்டு விபரீத சம்பவம் நடந்ததாக கூறியுள்ளனர்.