முகநூல் காதலினால் 17 வயது யுவதிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

முகநூல் ஊடாக ஏற்பட்ட காதலினால் 17 வயதான யுவதியொருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.

உடவளவ பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியொருவரே இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.

முகநூலின் ஊடாக காதல் வயப்பட்ட யுவதியொருவரை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவமொன்று பலாங்கொட, வெலிகெபொல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உடவளவ பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒரு மாத காலமாக முகநூல் ஊடாக இளைஞர் ஒருவரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார்.

முகநூலில் இளைஞரின் புகைப்படங்களைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டே யுவதி காதல் வயப்பட்டுள்ளார்.

யுவதியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடந்த 20ம் திகதி கொழும்பிற்கு வருமாறு யுவதிக்கு குறித்த இளைஞர் அறிவித்துள்ளார்.

இதனை நம்பிய யுவதி இளைஞரின் அழைப்பினை ஏற்று வீட்டாருக்குத் தெரியாமல் பஸ் மூலம் கொழும்பிற்கு சென்றுள்ளார்,

பஸ்ஸில் கொழும்பை நெருங்கும் போது தமக்கு இன்று அலுவலகத்தில் அதிக வேலைப்பளு காணப்படுவதாகவும் நண்பர் ஒருவர் அழைத்து வர வருவார் எனவும் இளைஞர் கூறியுள்ளார்.

அலுவலகத்தில் தாம் காருடன் காத்திருப்பதாகவும் பஸ் தரிப்பிடத்திற்கு வர முடியாது எனவும் குறித்த இளைஞர் யுவதியிடம் கூறியுள்ளார்.

பயம் கொள்ளத் தேவையில்லை, நண்பரின் தொலைபேசி இலக்கம் அங்க அடையாளங்கள் என்பனவற்றை யுவதிக்கு தொலைபேசி மூலம் குறித்த இளைஞர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன் அடிப்படையில் நண்பருடன் குறித்த யுவதி பஸ்ஸில் பயணித்துள்ளார். குளிர்பானம் ஒன்றையும் குடித்த யுவதி எழுந்து பார்க்கும் போது பலாங்கொடை பிரதேசத்தில் இருப்பதனை உணர்ந்துள்ளார்.

நண்பர் காலையில் வந்து அழைத்துச் செல்வார். நாம் இப்போது அக்காவின் வீட்டுக்குச் செல்வோம் என குறித்த யுவதியை வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்ற காதலனின் நண்பர், பாலியல் ரீதியாக யுவதியை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

வீட்டில் மகள் இல்லாத காரணத்தினால் பெற்றோர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். யுவதியும் தமக்கு நேர்ந்த கதி பற்றி பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் குறித்த யுவதி மருத்துவ பரிசோதனைக்காக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முகநூலில் கவர்ச்சியான வேறு ஒருவரின் புகைப்படத்தை பதிவேற்றி அதன் ஊடாக யுவதியை ஏமாற்றி, அவரை துஸ்பிரயோகம் செய்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

நண்பராகவும் முகநூலில் காதலனாகவும் தோன்றி யுவதியை ஏமாற்றியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*