இனிமேல் வாட்ஸ் அப் இல்லை – அதிர்ச்சி தகவல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஒரு பில்லியனிற்கும் அதிகமான பயனர்களை தன்னகத்தே கொண்டு முன்னணி அப்பிளிக்கேஷன்களுள் ஒன்றாக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது.

இச் செயலியானது அனைத்து வகையான மொபைல் இயங்குதளங்களிலும் செயற்படக்கூடிய வகையில் வெளியிடப்பட்டிருக்கின்றது.

எனினும் இவ் வருடம் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு பின்னர் இரு பிரதான இயங்குதளங்களைக் கொண்ட மொபைல் சாதனங்களில் செயற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ் இரு இயங்குதளங்களும் Windows Phone 8.0 மற்றும் பிளாக்பெரியின் BlackBerry OS, BlackBerry 10 என்பனவாகும்.

சிம்பியன் இயங்குதளத்தில் இச் செயலியின் செயற்பாட்டினை கடந்த ஜுன் 30ம் திகதியுடன் நிறுத்தியுள்ளது.

அதேபோன்று Android 2.3.7 அல்லது அதற்கு முந்திய பதிப்புக்களில் 2020ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் வாட்ஸ் ஆப் செயற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*