பகல் கனவு காண்பவரா நீங்கள் அதன் பலன்களைப் பற்றி தெரியுமா?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

pakal

பொதுவாகவே நமது ஊரில் பகல் கனவு காண்பவர்களை வேலை வெட்டி இல்லாதவன் என்று கூப்பிடுவார்கள். ஆனால், பகல் கனவு காண்பவர்கள் சிறந்த அறிவுத்திறனுடன் கூடிய படைப்பாளிகளாக இருப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

  • ஆசிரியர்கள், பெற்றோர்கள், வேலையிடத்தில் பணி புரியும் மேல் அதிகாரிகள் என அனைவரும் பகல் கனவு காண்பவர்களை கவனக் குறைவு உள்ளவர்கள் என்று கூறுவார்கள். ஆனால், மற்றவர்களுடன் ஒப்பிடும் போது பகல் கனவு காண்பவர்களுக்கு அறிவுத்திறனும், படைப்பு திறனும் அதிகமாக இருக்கிறதாம்.
  • பகல் கனவு காண்பவர்கள் எப்போதும் ஏதோ ஒரு நேர் கோட்டில், ஒரே சிந்தனையில் தான் இருப்பார்கள். இது அவர்களது படைப்பு திறனை அதிகரிக்கிறது.
  • இவர்களுக்கு மன சோர்வோ, மன அழுத்தமோ அதிகமாக ஏற்படுவது இல்லை. மேலும் மற்றவர்களுடன் ஓப்பிடுகையில் பகல் கனவு காண்பவர்களின் ஆரோக்கியமானது நல்ல நிலையில் இருக்கிறது.
  • மற்றவர்களது உணர்வுகளையும், மன நிலையையும் கணிக்க கூடிய திறன் இவர்களுக்கு இருக்கிறதாம். இதன் மூலம் யாரிடம் எப்போது என்ன வேலை கொடுக்க வேண்டும் என்பதில் சரியாக தேர்வு செய்து வேலை வாங்குவார்களாம்.
  • கற்பனை திறன் மிகவும் அதிகமாய் இருக்கும் இவர்கள், பகல் கனவு காண்பதன் மூலம், இவர்களது அறிவுத்திறன் மேம்படுகிறதாம்.
  • பகல் கனவு காண்பவர்கள் யாரிடமும் உதவி ஏதும் வேண்டி நிற்காமல் அவர்களது திறனை உணர்ந்து அவர்களால் என்ன செய்ய முடியும், அதை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ளலாம், வெற்றியை அடைவது எப்படி என அனைத்தையும் சுயமாக கண்டுணரும் தன்மைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • பகல் கனவு காணும் போது யாரும் எதிர்வினையாக நினைப்பது இல்லை, இதனால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கிறது. பகல் கனவினால், நீண்ட மகிழ்ச்சி அடையும் இவர்களது மன நிலை எப்பொழுதும் மேலோங்கியே இருக்கிறது.
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit