கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய டோனி!

பிறப்பு : - இறப்பு :

இலங்கை அணிக்கு எதிரான தொடரை வென்ற சந்தோஷத்தில் கிறிஸ்துமஸையும் இந்திய வீரர்கள் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி மும்பையில் நேற்று நடைபெற்றது. இலங்கை நிர்ணயித்த 136 ஓட்டங்கள் இலக்கை துரத்திய இந்திய அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

போட்டி முடிந்தவுடன் இந்திய வீரர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, டோனி தலையில் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பியை வீரர்கள் அணிவித்தனர்.

இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை மொத்தமாக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit