விராட் கோஹ்லி அனைத்து சாதனைகளையும் உடைப்பார்: வக்கார் யூனிஸ்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

kooo

இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி துடுப்பாட்டத்தில் உள்ள அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் கூறியுள்ளார்.

இந்திய அணி அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.

இதற்கான 17 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. திருமணம் காரணமாக இலங்கை தொடரில் இருந்து விலகிய கோஹ்லி தென் ஆப்பிரிக்கா தொடரில் திரும்பவுள்ளார்.

இந்திய மண்ணில் அசத்தி வரும் இவர் தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா மண்ணில் சாதிக்குமா என்று பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான வக்கார் யூனிஸ், விராட் கோஹ்லி மிகவும் திறமைவாய்ந்த துடுப்பாட்ட வீரர், டெக்னிக்கலாக பந்துவீச்சாளர்களை எதிர்கொள்கிறார்.

அடுத்து வரும் ஆண்டுகளில் அனைத்து விதமான துடுப்பாட்ட சாதனைகளையும் அவர் முறியடிப்பார் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit