ஒரே அடியில் இளம் பெண்ணை சுருண்டு கீழே விழ வைத்த பொலிசார்: கொதிக்கும் மக்கள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஸ்பெயினில் பொலிசார் ஒருவர் இளம் பெண் ஒருவரை அடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஸ்பெயினின் Valencia பகுதியில் இருக்கும் வீதி ஒன்றில் ஸ்பெயின் பொலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கிருந்த வீதி ஒன்றில் இளம் பெண் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது இரண்டு பொலிசாரில் ஒருவர் திடீரென்று அப்பெண்ணை கன்னத்தில் அடிக்க, இதில் அப்பெண் நிலை தடுமாறி அந்த இடத்திலே சுருண்டு கீழே விழுகிறார்.

இது தொடர்பான வீடியோவை ஸ்பெயினின் பிரபல நடிகை Leticia Dolera சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து, என்ன இது? என்ன காரணத்திற்காக அந்த பெண்ணை இப்படி அடித்தீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே போன்று இந்த வீடியோவைக் கண்ட மக்கள் சிலர், பொலிசார் காட்டு மிராண்டி போன்று நடந்து கொண்டனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வீடியோவில் கடைசி ஏழு நொடி மட்டுமே வெளியாகியுள்ளதால், அதற்கு முன்னர் நடந்தது என்ன, பின்னர் நடந்தது என்ன என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் இது குறித்து உள்ளூர் ஊடகம், பொலிசாரால் அடிக்கப்பட்ட பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் இது குறித்து முழுமையான தகவல்கள் தெரியவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*