இலங்கையில் ஒரே நாளில் இத்தனை கோடி ரூபா வருமானமா?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

car

இலங்கையிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக 24 மணித்தியாலத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் பயணித்துள்ளன.

இது கடந்த சனிக்கிழமை இரவு 12 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் கணக்கிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் செயற்பாட்டு இயக்குனர் ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியினுள் 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. பொதுவாக நாள் ஒன்றுக்கு 60 – 65 ஆயிரம் வாகனங்கள் பயணிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சாதாரண நாட்களின் வருமானம் கிட்டத்தட்ட 20 மில்லியன் ரூபாவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 12 மணித்தியாலத்துடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் வாகனங்கள் பயணித்துள்ளதாக ஓபநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிற்கு வெளியே பயணித்த அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் கொழும்பிற்குள் நுழைய சந்தர்ப்பம் உள்ளமையினால் மேலதிக கொடுப்பனவு கவுன்டர்களை திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit