வேட்புமனுவில் ஐ.தே.க. திருகுதாளம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நான்போட்டியிடவில்லை. அந்தக் கட்சியின் வேட்பு மனுவிலும் நான் கையெழுத்திடவில்லை.எனது பெயரையும், தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் பயன்படுத்தி அந்தக் கட்சிதிருகுதாளம் செய்துள்ளது. இவ்வாறு வேலணை பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில்போட்டியிடும் பொன்னம்பலம் நடனசிகாமணி குற்றஞ்சாட்டினார்.

வேலணை பிரதேச சபைத் தேர்தலில் ஒரே வேட்பாளர் இரண்டு கட்சிகள் சார்பில்போட்டியிடுகின்றார் என்று செய்தி வெளியாகியிருந்தது. இது தொடர்பில் நடனசிகாமணிவிளக்கமளித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் வேலணையில் போட்டியிடவே நான்தீர்மானித்தேன். அதற்கான உறுதிமொழியையும் அந்தக் கட்சிக்கு வழங்கியிருந்தேன்.

நான் கடையில் இருந்த போது இரு வாகனத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினர் அங்குவந்தார்கள். ஒரு வாகனத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டஅமைப்பாளரும் இராஜாங்க அமைச்சருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் இருந்தார்.

அவரது வாகனச் சாரதியான சசி என்பவர் எனக்கு மிகவும் தெரிந்த நபர். அவர்என்னிடம் வந்து, “அண்ணை உங்களுடைய தேசிய அடையாள அட்டையைக் கொடுங்கள் என்றுகேட்டார்.

அதற்கு நான், “ஏன்?” என்று கேட்டேன். “எல்லாம் நல்லவிடயமாகத்தான்” எனக் கூறிக்கொண்டு எனது பொக்கற்றிலிருந்த தேசிய அடையாளஅட்டையை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றார்.

சில நிமிடங்களில் அவரிடமிருந்துஅதை நான் மீண்டும் பெற்றுக்கொண்டேன்.அன்று இரவு ஐக்கிய தேசியக் கட்சியினர் எனது வீட்டுக்கு வந்தார்கள்.

வேலணைபிரதேச சபைக்கு தமது கட்சி சார்பில் போட்டியிடவேண்டும் என்று என்னைவற்புறுத்தினார்கள். நான் திட்டவட்டமாக மறுத்து விட்டேன். அவர்கள் வெளியேறிச்சென்று விட்டார்கள். இதுதான் நடந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நான் போட்டியிடுவதற்கு எந்தவொருவிண்ணப்பப் படிவத்திலும் கையெழுத்திடவில்லை.

ஊடகங்களில் செய்தி பார்த்த பின்னரேஎனது பெயர் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில்உள்ளடக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.

எனது பெயரையும், தேசிய அடையாள அட்டைஇலக்கத்தையும் அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். ஆனால், அதில் இடப்பட்டிருப்பதுஎனது கையெழுத்தல்ல என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*