முல்லைத்தீவு அடர் காட்டுக்குள் புலிகளின் தங்கம் தேடிய 11 பேருக்கு நடந்த சம்பவம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்து வைத்திருப்பதாக நம்பப்படும் நகைகள் தோண்டி 11 பேரை புதுக்குடியிருப்பு பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள்.

24.12.2017 அன்று இரவு 12.00 மணியளவில் 11 பேர் கொண்ட குழுவினர் இரண்டு ஊர்திகளில் புதுக்குடியிருப்பு கைவேலிபகுதியில் உள்ள முன்னர் விடுதலைப்புலிகளின் முகாம் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் தங்கம் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் இதுகுறித்து புதுக்குடியிருப்பு பொலீஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பொலீஸார் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தமாத்தறை,கொழும்பு,கண்டி,கொட்டாவ,கடவத்த,கொட்டகேன,கிறான்பாஸ்,கிளிநொச்சி,யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களை சேர்ந்த 11 பேரை கைதுசெய்துள்ளதுடன் இவர்கள் வந்த டாட்டா கப் வாகனம் மற்றும் கையுண்டாய் வாகனங்களையும் தோண்டும் நடவடிக்கைக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் கைதுசெய்துள்ளார்கள்.

இவர்களை நாளை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*