தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நல்லூர்த் தொகுதி வேட்பாளர்கள் அறிமுகம்!

பிறப்பு : - இறப்பு :

உள்ளூராட்சிசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையின் நல்லூர் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் 04 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதோடு வேட்பாளர்களுக்கான தேர்தல் விதிமுறைகள் தொடர்பான விளக்கவுரைகளும் இடம்பெற்றது.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நல்லூர் தொகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் சம உரிமை இயக்கம் மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்து போட்டியிடுகின்றது.

நல்லுர்த் தொகுதியில் 12 வட்டாரங்களிலும் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு வேட்பாளர் என்ற அடிப்படையில் 12 வேட்பாளர்களும் விகிதாசார அடிப்படையில் 11 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

நல்லூர் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வருமாறு,

வட்டாரப் பட்டியல் வேட்பாளர்கள் அறிமுகம்

வட்டார இல, வட்டாரத்தின் பெயர், வேட்பாளர் பெயர்.

1 காரைக்கால் கௌசலா சிவா
2 கோண்டாவில் வடக்கு கந்தையா லவேந்தன்
3 கோண்டாவில் கிழக்கு விநாயகம் குகதாசன்
4 கொக்குவில் மேற்கு தேவராஜா ஷேபன்
5 கேணியடி புத்மநாதன் மயூரன்
6 கொக்குவில் மத்தி செல்லையா செல்வரத்தினம்
7 கொக்குவில் கிழக்கு கந்தைய நவரத்தினம்
8 திருநெல்வேலி மத்திய இரத்தினம் சிவநாதன்
9 திருநெல்வேலி வாசுகி சுதாகர்
10 கல்வியன் காடு தெற்கு சுண்முகலிங்கம் சுரேஸ்குமார்
11 அரியாலை கிழக்கு அழகேந்திரம் அகிலாண்டரூபி
12 மணியந்தோட்டம் சுப்பிரமணியம் சுசீந்திரன்

விகிதாசார பட்டியல் வேட்பாளர்கள் அறிமுகம்
01 லதா கோடீஸ்வரன்
02 சுப்பிரமணியம் பாப்பம்மா
03 குலேந்திரன் பிரிந்தா
04 ஜெகசோதி இராசலிங்கம்
05 அருணச்சாலம் சண்முகலிங்கம்
06 யூட்பிறைனார் அன்ரன் கொன்ஸர்ன்ரைன்
07 யோகராசா அரிஜின்
08 நல்லையா மதனகுமார்
09 அருளானந்தம் அருள்செல்வன்
10 சுப்பிரமணியம் பாம்மா
11 மகாதேவன் விஜீதரன்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit