மோசடி செய்து பணம் பறித்த இருவர் கைது!

பிறப்பு : - இறப்பு :

வெளிநாடுகளுக்கு பயணங்களை ஏற்பாடு செய்து தருவதாக கூறி பலரிடம் பணத்தை பெற்று மோசடி செய்த இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சீதுவை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி நாட்டில் பல பிரதேசத்தை சேர்ந்தவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து நாட்டில் பல பிரதேசங்களை சேர்ந்த 61 பேரின் கடவுச்சீட்டுக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கம்பஹா பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 49 மற்றும் 83 வயதான நபர்களே சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit