லிந்துலையில் உருக்குலைந்த நிலையில் சிசுவின் சடலம் கண்டெடுப்பு!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

2

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை டிலிகுற்றி தோட்டத்தில் உருக்குலைந்த நிலையில் சிசுவின் சடலம் லிந்துலை பொலிஸாரால் அன்று (திங்கட்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, டிலிகுற்றி தோட்டத்தில் தேயிலை மலையில் தண்ணீர் பார்ப்பதற்காக சென்ற ஒருவர் அவ்விடத்தில் காணனப்பட்ட சிசுவின் சடலத்தினைக் கண்டுள்ளார்.

இதனையடுத்து லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை கண்டெடுத்துள்ளதுடன்,குறித்த சடலம் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

நுவரெலியா மாவட்ட நீதவானின் விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit