வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீதிகள் சிலவற்றை புனரமைக்க நடவடிக்கை!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

roa

இதற்கான திட்டத்தின் கீழ் 1,847.4 கிலோ மீற்றர் வீதிகள் புனரமைக்கப்படுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும்நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட நடவடிக்கையின் கீழ், யாழ் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகருக்கு உட்பட்ட 27 தசம் 7 கிலோ மீற்றர் வீதியும், யாழ்ப்பாணம் – பொன்னாலை – பருத்தித்துறைக்கும் இடைப்பட்ட 36 தசம் ஒன்று ஐந்து கிலோ மீற்றர் வீதியும், வழுக்கையாறு – புங்குடுதீவு – குறிகட்டுவானுக்கு உட்பட்ட 24 தசம் 5 கிலோ மீற்றர் வீதியும் புனரமைக்கப்படவுள்ளன.

கிளிநொச்சியில் முறிகண்டி, கனகபுரம், டுப்ளிக்கேசன் வீதியும், முல்லைத்தீவில் வன்னிவிளாங்குளம், பனங்காமம் உட்பட்ட வீதியும், இரட்டைவாய்க்கால் மத்தளன் சாலை வீதியும், வற்றாப்பளை பிரதான வீதியும், மன்னார் மாவட்டத்தில் பிரமனாலங்குளம், பெருப்புக்கடந்தான் வீதியும், மஹிலங்குளம், பள்ளமடுவுக்கு உட்பட்ட வீதிகள் பலவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் தோப்பூர் மத்திய வீதி, சீதனாவெளி – பாட்டாளிபுரம் வீதிகளும், அம்பாறை மாவட்டத்தில் பானம, கும்புக்கல் வீதியும், சியம்பலாண்டுவ – தமண வீதிக்கு உட்பட்ட பல வீதிகள் புனரமைக்கபபடவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் – தொப்பிகல வடமுனை வீதியும் மரைன் ட்ரைவ் உட்பட பல வீதிகளும் புனரமைக்கப்படவுள்ளதாக என்று தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit