விரைவில் முதலமைச்சராக தினகரன் பதவியேற்பார் – புகழேந்தி பரபரப்பு பேட்டி!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

dinakaran

தினகரன் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டு இமாலய வெற்றி பெற்று உள்ளார்.

அவர் மீது பெண்கள் மிகுந்த நம்பிக்கை வைத்து ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்துள்ளனர். எனவே ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு என்பதை அவர் நிரூபித்து உள்ளார்.

அவருக்கு வேலூர் அதிமுக எம்.பி செங்குட்டுவன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். மற்ற எம்.எல்.ஏக்கள் அவருக்கு தொலைபேசியில் ரகசியமாக வாழத்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், இபிஎஸ் அணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் அனைவரும் வருவார்கள். பின்னர் சசிகலா ஒப்புதலின்படி புதிய சட்டமன்ற கட்சித்தலைவராக தினகரன் தேர்ந்தெடுக்கப்படுவார். இதற்கான நேரம் கனிந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit