இளம்பெண்ணை உயிரோடு எரித்த இளைஞர்: வெளியானது பின்னணி தகவல்கள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தெலுங்கானா மாநிலத்தில் தனது காதலை ஏற்க மறுத்த காரணத்தால் இளம்பெண் ஒருவரை கார்த்திக் என்பவர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்தால் சந்தியாவின் குடும்பத்தினர் மீளாத்துயரத்தில் உள்ளனர்.

“அக்கா, நான் இறக்க போகிறேன் என்று எனக்கு தெரியும். என் வயிறு எரிகிறது. ஆனால், தயவுசெய்து அவனை விட்டுவிடாதீர்கள். அவனுக்கு தண்டனை கிடைக்காமல் விட்டுவிடாதீர்கள்.” என இறப்பதற்கு முன் தனது சகோதரி சரிதாவிடம் சந்தியா உதிர்த்த கடைசி வார்த்தைகள் இவை.

சந்தியாவின் வீட்டிலிருந்து 15 நிமிட நடைபயணத்தில் உள்ள சிறிய நிறுவனம் அலுமினிய பொருட்களை உற்பத்தி செய்தது. இங்குதான் சந்தியா பணியாற்றி வந்துள்ளார்.

இதே நிறுவனத்தில் 28 வயதா கார்த்திக்கும் சுமார் 4 மாதங்களாக பணியாற்றியுள்ளார். ஆனால் போதிய திறமை இல்லாத காரணத்தால் அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கார்த்திக்கின் தாய் ஊர்மிளா கூறியதாவது,

எனது மகன் அப்பெண்னை பைத்தியக்காரத்தனமாக காதலித்தான், இரண்டு வருடங்களுக்கும் மேலாக அவர்கள் ஒருவரையொருவர் அறிந்திருந்தார்கள். அவர்களிருவரும் ஒரு பேருந்து நிறுத்தத்தில் பேசுவதை கூட நான் பார்த்திருக்கிறேன். நான் அந்தப் பெண்ணைப் பற்றி என் மகனிடம் கேட்டேன். அவர் அப்பெண்ணை நேசிப்பதாகவும்,அவரை திருமணம் செய்துகொள்வதாகவும் கூறினான்.

2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருவரும் சண்டையிட்டபோது, கார்த்திக் தனது வாழ்க்கையையே முடிவுக்கு கொண்டுவர முயற்சித்தான் என கவலையாக கூறியுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று கூட, சந்தியாவை அழைத்துக்கொண்டு போய் அவளது வீட்டில் விடப்போகிறேன் என்றுதான் கூறிச்சென்றான். ஆனால் இப்படி ஒரு விபரீத சம்பவம் நடைபெற்றுவிட்டது.

வீட்டை விட்டு வெளியேறி ஒரு மணநேரமும் ஆகியும் வீடு திரும்பாத காரணத்தால் நான் அவனுக்கு போன் செய்தேன், அவர் தான் வந்துகொண்டே இருப்பதாக கூறினான். ஆனால், ஐந்து நிமிடங்களுக்குள் அவர் மீண்டும் என்னை தொடர்புக் கொண்டு, தான் சந்தியாவை பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டதாக கூறினான்.

கார்த்திக் சம்பவம் நடந்த தினத்தன்றே கைது செய்யப்பட்டார். அவர் மீது 302 ஐபிசி, 354 ஐபிசி, 354 (டி) ஐபிசி மற்றும் 1989ம் ஆண்டு எஸ்சி எஸ்டி பிஓஏவின் பிரிவு 3(ii)ன்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஹைதராபாத்திலுள்ள சஞ்சல்பகுடா சிறைச்சாலைக்கு நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

சந்தியாவின் குடும்பம்

ஆறு பிள்ளைகளை கொண்ட சந்தியாவின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் ஆகும். எனது தங்கைக்கு காதல் எல்லாம் இருந்திருக்காது, அவள் குடும்பத்தின் வறுமையை நினைத்து உழைப்பவள், இதுபோன்ற தவறாக செய்திகளை பரப்பாதீர்கள் என சந்தியாவின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

எனது அழகான மகாராணி இங்கு இல்லை என சந்தியாவின் தாய் சாவித்திரி தற்போது வரை கதறி அழுதபடி இருக்கிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*