பிலிப்பைன்ஸை புரட்டி எடுத்த டெம்பின் புயல்..200 பேர் பலி: 160 பேரை காணவில்லை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

pl

பிலிப்பைன்ஸ் நாட்டில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மையம் கொண்ட புயல் ஒன்று அந்நாட்டையே புரட்டி எடுத்துள்ளது.

சுனாமி, வெள்ளப்பெருக்கு, புயல், சூறாவளி என இயற்கைப் பேரிடர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டை தொடர்ந்து வதைத்து கொண்டு தான் இருக்கிறது.

அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், மையம் கொண்ட புயல் ஒன்று அந்நாட்டையே புரட்டி எடுத்துள்ளது.

டெம்பின் என கூறப்படும் இந்த புயலின் காரணமாக மிண்டானோ நகரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மிண்டானோ நகரின் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புயலினால் டெல் நார்ட்டே மாகாணத்திலும் மிண்டானோவா மாகாணத்திலும் சுமார் 180 பேர் பலியாகி இருக்கலாம் என்றும் சுமார் 100 பேர் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பலியின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தற்போது பலியின் எண்ணிக்கை 180-லிருந்து 200-ஆகவும், காணமல் போனவர்கள் 100-லிருந்து 160-பேராக உயர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தற்போது அங்கு மணிக்கு 80 கி.மீற்றர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் இடைவிடாத மழையும் பெய்து வருகிறது. மழையின் காரணமாக கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit