தமிழரசுக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காவிடின் முரண்பாடுகள் வலுக்கும்: சித்தார்த்தன்

பிறப்பு : - இறப்பு :

கட்சித் தீா்மானங்களை மீறுகின்ற தங்களது கட்சித் உறுப்பினர்களுக்கு எதிராக தமிழரசுக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என புளொட் தலைவரும்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் அண்மைக்காலமாக நிலவி வருகின்ற முரண்பாடுகள் தொட்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு, உறுப்பினர் ஒதுக்கீடு தொடர்பில் புளொட் கட்சிக்கும், தமிழரசுக் கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

அதற்கு காரணம், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவில் என்ன வீதத்தில் வேட்பாளர்களை நிறுத்துவது போன்ற விடயங்களில் இணக்கப்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால் தமிழரசுக் கட்சி அந்த ஒப்பந்தங்களில் பல மாற்றங்களைச் செய்தது. அந்த மாற்றங்கள் குறித்து எம்மிடம் அவர்கள் கேட்கவில்லை.

ஆனால் மாற்றம் செய்துள்ளோம் என்று சொன்னார்கள். ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதை ஏற்க முடியாது என நாங்கள் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் கூறினோம். தற்போது பிரச்சினைகள் ஓரளவு சுமூகமாக இருக்கின்றது.

எனினும், தமிழரசுக் கட்சி தங்களது இரண்டாம் நிலைத் தலைவர்கள் அல்லது மாற்றுக் கட்சியிலிருந்து புதிதாக இணைந்து கொண்ட தலைவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும்” என்று தெரிவித்துள்ளார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit