அனைவருக்கும் இனிய நத்தார் தின நல் வாழ்த்துக்கள்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

tns

இறைமகனாம் இயேசு பிரான் பிறந்த தினமான இன்று நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் அதிர்வு இணையம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக இலங்கை உட்பட உலக வாழ் கிறிஸ்தவர்கள் நள்ளிரவு தேவ ஆராதனைகளில் ஈடுபட்டிருந்தனர்.

நாட்டின் சகல கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நேற்றிரவு இடம்பெற்ற திருப்பலி ஆராதனைகளில் பெருமளவிலான மக்கள் பங்குபற்றியிருந்ததாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

வரலாறு..

”இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்” – ஏசாயா 7.14
2000 வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு ஒரு நாளில் பனிபொழியும் இரவில் எந்த வித ஆர்ப்பாட்டமுமின்றி பாலகனாம் இயேசு கிறிஸ்து மண்ணி்ல் மனுவானார்.

பெத்லகேம் ஊரில் மாட்டுத்தொழுவத்தில் போர்த்துவதற்கு சிறந்த துணிகள் இன்றியே இவ்வுலகின் இரட்சகர் அவதரித்தார்.

தனது உயிரையே இவ்வுலகத்திற்காக ஈந்த நாயகனின் பிறப்பை கிறிஸ்தவர்கள் மாத்திரமின்றி முழு உலகமுமே ஆர்ப்பாட்டத்துடன் கொண்டாடுகின்றது.

கரோல் கீதங்கள் இசைக்க ஆலயங்கள் தோறும் வழிபாடுகளுடன் இன்று முழு உலகுமே நத்தார் பண்டிகையை வரவேற்று அகமகிழ்கின்றது.

உலக நாடுகளில் நத்தார் பண்டிகையின் உற்சாகம் எப்போதும் மிதமிஞ்சியே காணப்படுகின்றது.

பனிபொழியும் மார்கழியில் பாலனின் பிறப்பு நாடுகளுக்கிடையே நிலவும் முரண்பாடுகளைக் களைந்து ஒற்றுமையாக வாழ வழி செய்கின்றது என்பதில் ஐயமில்லை.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit