ஐ.நா-வின் தடையால் குமுறும் வடகொரியா: இது போர் தாக்குலுக்கு ஒப்பானது என அறிக்கை

பிறப்பு : - இறப்பு :

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த புதிய பொருளாதார தடைகள், போர் நடவடிக்கைகளுக்கு ஒப்பானது என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு, உலகநாடுகளை அச்சுறுத்தி வரும் வடகொரியாவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்று முன்னரே அந்நாட்டின் மீது பல பொருளாதார தடைகள் உள்ளன.

இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது.

அந்த புதிய பொருளாதார தடையில், வட கொரியாவின் பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதியை ஒரு வருடத்திற்கு 5,00,000 பீப்பாய்களாகக் குறைப்பது.

கச்சா எண்ணெய்யை ஒரு வருடத்திற்கு 4 மில்லியன் பீப்பாய்களாகக் குறைப்பது.

இயந்திரங்கள், மின் உபகரணங்கள் உள்ளிட்ட வட கொரியா பொருட்களின் ஏற்றுமதிக்குத் தடை, வெளிநாடுகளில் வேலை செய்யும் வட கொரியர்கள் 24 மாதத்தில் நாடு திரும்ப வேண்டும் போன்றவைகள் உள்ளது.

இதுகுறித்து வட கொரிய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எங்கள் மீது விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகளை முழுமையாக நிராகரிக்கிறோம்.

எங்கள் நாட்டின் இறையாண்மை மீது, மிகக் கடுமையான தாக்குதலை அந்தப் பொருளாதாரத் தடை நிகழ்த்தியுள்ளதால், அந்தத் தடை போர்ச் செயலுக்கு ஒப்பானதாகும்.

கொரிய தீபகற்பம் மட்டுமன்றி, இந்த மண்டலம் முழுவதும் நிலவி வரும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்தப் பொருளாதாரத் தடை கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா கடந்த மாதம் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனையை நடத்தியதற்கு பதிலடியாக அந்நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சனிக்கிழமை புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit