புதுக்குடியிருப்பில் சோகம்; ஆற்றில் மூழ்கி உயர்தர மாணவர் இருவர் பலி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு கோப்பாபுலவு வீதியில் உள்ள கள்ளியடி ஆற்றில் குளிக்கசென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் (2019) வணிக பிரிவில் கல்வி கற்கும் புதுக்குடியிருப்பு சிவநகரை சேர்ந்த தவராசசிங்கம் தனுசன் (வயது 17) 2019 உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் சிவராசா பகீரதன் (வயது 17) ஆகிய இரண்டு மாணவர்களே பலியாகியுள்ளனர்.

புதுக்குடியிருப்பை சேர்ந்த 07 இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளினை களிப்பதற்காக இன்று மதியம் கள்ளியடிப்பகுதியில் உள்ள ஆற்றிற்கு குளிக்கச் சென்றுள்ளனர்.

இதன்போது இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களை மற்றைய இளைஞர்கள் தேடியபோது அவர்கள் இருவரும் ஆற்றின் சேற்றில் புதைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம மக்கள் மற்றும் பொதுமக்களின் துணையுடன் இருவரின் உடலங்களையும் மீட்டுள்ளார்கள்.

குறிப்பிட்ட ஆற்றுப்பகுதியில் அதிகளவான மண் எடுக்கப்பட்டுள்ளதால் ஆழமான பகுதியாகவும் அதேவேளை சேறு நிறைந்த பகுதியாகவும் காணப்பட்டுள்ளது. இதனாலே சேற்றில் இருவரும் புதைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் உடலங்களை எடுத்து புதுக்குடியிருப்பு மருத்துவ மனையில் ஒப்படைத்துள்ளார்கள். மருத்துவமனை மரணவிசாரணை அதிகாரியின் விசாரணை அறிக்கையின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

இதில் பகீரதன் என்னும் மாணவர் கடந்த வருடம் இடம்பெற்ற க பொ த சாதாரண பரீட்சையில் 9A சித்திகளை பெற்ற மிகவும் திறமையான மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தீபாவளி நாள் அன்று முல்லைத்தீவு கடலில் மூழ்கி இரண்டு உயர்தர பிரிவு மாணவர்கள் பலியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*