எழுவைதீவு – அனலைதீவுகளுக்கிடையில் எழுதாரகை படகுச்சேவை நேற்று ஆரம்பம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

எழுவைதீவு – அனலைதீவு ஆகிய தீவுகளில் வசிக்கும் 453 குடும்பங்களின் நன்மை கருதி அரசினால் 1130 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய படகு சேவை நேற்றுத் தொடக்கி வைக்கப்பட்டது.

நேற்று மாலை 05.00 மணியளவில் ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறைமுகத்திலிருந்து எழுதாரகை படகு தனது முதற் பயணத்தை ஆரம்பித்தது.

வட மாகாண ஆளுநர் றெஜினோல்குரே இதனை ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், பிரதேச செயலாளர் மஞ்சுளா, உதவி அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*