2018ல் நடக்கப்போவது இதுதான்: பரபரப்பாகும் பாபா வாங்காவின் கணிப்பு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பல்கேரியாவை சேர்ந்த பெண் பாபா வாங்கா உலகில் நடக்கவுள்ள நிகழ்வுகளை முன்னரே கணித்து கூறியுள்ளார்.

தனது 85 வயதில் 1996ம் ஆண்டு மரணமடைந்த பாபா வாங்காவின் கணிப்புகள் 85 சதவிகிதத்துக்கும் மேல் பலித்துள்ளன.

2017ம் ஆண்டுக்கு பின்னர் மூன்றாம் உலகப்போர் நடக்கும் என இவர் கணித்துள்ளது பலரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

இந்நிலையில் 2018ம் ஆண்டில் சீனா உலகளவில் பலம் வாய்ந்த நாடாக மாறும் என்றும், வீனஸ் கிரகத்தில் புதிய கண்டுபிடிப்பு நிகழும் என கணித்துள்ளார்.

இவரது கணிப்புகள் பலிக்குமா?
2018ம் ஆண்டு யூலை மாதத்தில் Parker Solar Probe என்ற விண்கலத்தை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

இந்த விண்கலம் வீனஸ் கிரகத்தில் தரையிறக்கப்படவில்லை என்றாலும், இதன் முக்கிய குறிக்கோள் சூரியனை சுற்றியுள்ள காந்த புலத்தின் வடிவம் மற்றும் சூரியப் புயலுக்கான மூலத்தை கண்டுபிடிப்பதாகும்.

மேலும் சூரியனை சுற்றியுள்ள பிளாஸ்மாவுக்கு எங்கிருந்து ஆற்றல் வருகிறது என்பதையும் கண்டறியும்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே Conference Board- 2018ம் ஆண்டில் அமெரிக்காவை விட சீனா பலம் வாய்ந்ததாக மாறும் என தெரிவித்தது.

இவை இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் பாபா வாங்காவின் கணிப்பு நிச்சயம் பலிக்கும் என்றே நம்பப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*