எல்லையில் பாக். தாக்குதல் ராணுவ மேஜர், 3 வீரர்கள் பலி

பிறப்பு : - இறப்பு :

ஜம்மு காஷ்மீரில் எல்லைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் ராணுவ மேஜர் மற்றும் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம், கெரி செக்டார், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய வீரர்கள் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மதியம் 12.15 மணியளவில் இவர்கள் மீது பாகிஸ்தான் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதில் மேஜர் மோகர்கர் பிரபுல்ல அம்பாதாஸ், லான்ஸ் நாயக் குர்மைல் சிங், சிப்பாய் பர்கத் சிங் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 2 வீரர்கள் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.

மேஜர் அம்பாதாஸ் (32), மகாராஷ்டிர மாநிலம் பந்தரா மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு மனைவி உள்ளார். லான்ஸ் நாயக் குர்மைல் சிங் (34), பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸை சேர்ந்தவர். இவருக்கு மனைவியும் மகளும் உள்ளனர். சிப்பாய் பர்கத் சிங் (30), ஹரியாணா மாநிலம், கர்னால் மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு மனைவியும் மகனும் உள்ளனர்.

இதற்கிடையே பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் மேலும் ஒரு வீரர் இறந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. – பிடிஐ

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit