மனைவியின் கள்ள காதலை கண்டித்த கணவன்.! கள்ள காதலனோடு சேர்ந்து மனைவி!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

kill

மனைவியின் கள்ள காதலை கண்டித்த கணவன்.! கள்ள காதலனோடு மனைவி சேர்ந்து கணவனை செய்த விபரீத காரியம்.!!

ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர் சிவா . இவருடைய மனைவி அருணா சாய் சுபாஷ் என்ற இளைஞருடன் திருமணத்திற்கு முன்னே தொடர்பில் இருந்துள்ளார்.

பிறகு அருணா திருமணத்துக்கு பின்னரும் அதை தொடர்ந்துள்ளார். இதனையடுத்து சிவாவுக்கு மனைவியின் கள்ள காதல் தெரியவந்ததால் மனைவியை சிவா கண்டித்துள்ளார்.

இதனால் கணவரை கொல்ல அருணா திட்டமிட்டுள்ளார். அதன்படி தனது கள்ள காதலனிடம் தனது கணவரை மது அருந்த அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார் .

அவருடன் சென்ற சிவா மது அருந்திய போது போதை தலைக்கு ஏறியது. அப்போது சுபாஷ் மற்றும் அவரது நணபர்கள் மூன்று பேரும் சேர்ந்து சிவாவை கொலை செய்துள்ளனர்.

பிறகு சிவாவின் உடலை ஒரு காட்டு பகுதியில் விசியுள்ளனர். இதனையடுத்து அருணா ஒன்றும் தெரியாதது போல காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அருணா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் தீவிர விசாரணை நடத்திய போது உண்மையை ஒப்புகொண்டார்.

இதனை யடுத்து அருணா மற்றும் அவரின் கள்ளகாதலனை போலீசார் கைது செய்தனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit