ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மூடிமறைக்கப்பட மாட்டாது: மகிந்த

பிறப்பு : - இறப்பு :

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகாரம் சம்பந்தமான விசாரணை அறிக்கை எதிர்வரும் 30ஆம் திகதி கிடைக்க உள்ளதாகவும், அதனை நீதிமன்றத்திற்கு அனுப்ப ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுப்பார் எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பிணை முறிப்பத்திர விவகாரம் சம்பந்தமான விசாரணை அறிக்கையை மூடிமறைக்கும் எந்த தேவையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை சதொச நிறுவனத்தின் 380ஆவது கிளை அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் இன்று அம்பலாங்கொடையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் ஜனாதிபதி தூய்மையான அரசியல்வாதி என்ற வகையில், கடந்த அரசாங்கத்தில் நடந்ததா தற்போதைய அரசாங்கத்தில் நடந்ததா என்பதை பார்க்காது செயற்பட்டு வருகிறார்.

நாட்டு மக்கள் அதனை தற்போது புரிந்து கொண்டுள்ளனர் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit