புதிய பேருந்து நிலையத்திற்கு சென்றால் போராட்டம் வெடிக்கும்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

bus

வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து சேவைகளும் இடம்பெறும் போது வர்த்தகர்கள் பாதிப்படைந்தால் போராட்டம் வெடிக்கும் என்று வவுனியா வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வர்த்தக சங்க காரியாலத்தில் இன்றைய தினம் மாலை இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சேவை ஆகியவற்றிக்கிடையில் கடந்த 04.02.2017 அன்று வவுனியாவில் புதிய பேருந்து தரிப்பிடம் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, இரண்டு சேவைகளுக்கும் இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்படும் வரை கடந்த காலத்தை போல சேவைகள் தொடர அனுமதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அது வரை தற்காலிகமாக புதிய பேருந்து நிலையம் மூடப்பட்டிருக்குமெனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இணைந்த நேர அட்டவணை தயாரித்து வழங்கப்பட்டவுடன் இரு தரப்பினரும் மாவட்டங்களுக்கிடையிலான சேவைகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தினுள் உள்ளூர் சேவைகளும், பழைய பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் சேவைகளும் செயற்பட வேண்டுமெனவும் அதன் பிரகாரம் செயற்படாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இரு தரப்பினராலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாறு செயல்முறைபடுத்தப்படும் போது உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பாதிப்படைந்தால் போராட்டம் வெடிக்கும் என்று வர்த்தக சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், எதிர்வரும் 25ஆம் திகதி வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் இ.போ.ச சேவைகள் இடம்பெற வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் திட்டவட்டமாக அறிவித்தல் வழங்கியுள்ள நிலையிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit