தமிழ் அரசியல் தலைவர்களுக்கு ரெஜினோல்ட் குரே கோரிக்கை!

பிறப்பு : - இறப்பு :

நாட்டில் காணப்படும் எதிர்ப்பு அரசியல் முறை மாறி, அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

எழுவைத்தீவு மற்றும் அனலைதீவு மக்களின் நலன்கருதி மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட எழுதாரகை படகின் பயணத்தை, நேற்று (சனிக்கிழமை) மாலை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மலையக அரசியல் தலைவர்களும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அரசுடன் இணைந்து தமது பிரதேசங்களுக்கு தேவையான அபிவிருத்திகளை பெற்றுக்கொள்கின்றனர். எனினும், வடக்கு அரசியல் தலைவர்கள் எதிர்க்கட்சியில் இருப்பதால் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு தடையேற்பட்டுள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த எதிர்ப்பு அரசியல் நிலைமை மாறி, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அனைத்து அன்றாட பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமென ஆளுநர் தெரிவித்தார். நாட்டின் அபவிருத்திப் பாதையில் அனைவரும் இணைந்து பயணிப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, வடக்கு மக்களின் நிலையை நேரில் பார்வையிட்டு கவலையடைந்த வடக்கின் முன்னாள் ஆளுநர் பளிஹக்கார, மத்திய அரசுக்கு பல கடிதங்களை அனுப்பியதாகவும் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டார். அதன் பலனாகவே இன்று இம்மக்களுக்கு படகுச் சேவை கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit