பொங்கல் விடுமுறை எதிரொலி அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம்

பிறப்பு : - இறப்பு :

மின் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் இன்றும், நாளையும் அபராதம் இன்றி செலுத்தலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் மட்டும் அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதில் மின்வாரியத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால், மின் நுகர்வோர்கள் அன்றைய தினங்களில் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை இருந்தது. இதற்கு மாற்று ஏற்பாடாக இன்றும், நாளையும் எவ்வித அபராதமும் இன்றி கட்டணம் செலுத்தலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி கூறியதாவது: பொதுவாக 2 மாதங்களுக்கு ஒருமுறை மீட்டர் ரீடிங் எடுக்கப்பட்டு கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
அதிலிருந்து 15 நாட்களுக்குள் மின்கட்டணத்தை நுகர்வோர் செலுத்த வேண்டும். அதன்படி ஜனவரி 2ம் தேதி ரீடிங் எடுக்கப்பட்டவர்களுக்கு 15 மற்றும் 16ம் தேதிகளிலும், 3ம் தேதிக்கு 17ம் தேதியும் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் இந்த 3 நாட்களும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால், நுகர்வோர் நலன் கருதி, இன்றும், நாளையும் எவ்வித அபராதமும் இன்றி, விடுமுறை நாட்களில் செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தலாம் என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit