கிணற்றில் மிதக்கும் பெண்ணின் சடலம்! – கொலையா?

பிறப்பு : - இறப்பு :

மட்டக்களப்பு – தாழங்குடா பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அயலவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம், குறித்த பெண்ணின் சடலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளது.

61 வயதான குறித்த பெண்மணி, கொக்கட்டிச்சோலை முனைக்காடு பகுதியிலிருந்து வீடு திரும்பிய போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவர் கிணற்றிற்குள் தவறி விழுந்தாரா அல்து கொலையா என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் ஒருவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit