முல்லைத்தீவில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 441 பேர் கைது!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

arrest

முல்லைத்தீவில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 441 பேர் கைது செய்பப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்துள்ள சட்டவிரோதச் செயல்களைக்கட்டுப்படுத்தும் வகையில் முல்லைத்தீவு மாவட்ட மதுவரித்திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் மூலமே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கசிப்பு உடமையில் வைத்திருந்த 252 பேரும் மேலதிகமாக கள் வைத்திருந்த 83 பேரும், அனுமதிப்பத்திரமின்றி கள் விற்பனை செய்த 25 பேரும் 21 வயதிற்கு குறைந்த சிறார்களுக்கு புகையிலைப்பொருள் விற்பனை செய்த 44 வர்த்தகர்களும் கஞ்சா உடமையில் வைத்திருந்த மூன்றுபேரும் வெளிநாட்டு மதுபானத்தை அளவுக்கதிகமாக வைத்திருந்த ஒருவரும் வெளிநாட்டு மதுபானத்தை விற்பனை செய்த இரண்டு பேரும், அனுமதித்திரமின்றி அரச சீல் சாராயத்தினை விற்பனை செய்த மூன்றுபேரும், கசிப்பு உற்பத்திக்கான உபகரணம் வைத்திருந்த எட்டுப்பேரும், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 12 பேரும் கோடா வைத்திருந்த ஐந்து பேரும், கைது செய்யப்பட்டு இவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றின் ஊடாக தண்டிக்கப்பட்டுள்ளனர் எனவும் மாவட்ட மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit